புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக தமிழ்நாட்டிற்கு பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை உத்தரவின்பேரில் கடலூர், புதுச்சேரி சோதனைச்சாவடிகளில் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
கடலூரில் நூதன முறையில் எரி சாராயம் கடத்தல் - நூதன முறையில்
கடலூர்: சவப்பெட்டி மாதிரி செய்து நூதன முறையில் எரி சாராயம் கடத்தியச் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் மது கடத்தலை தடுக்கும் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி, தலைமைக் காவலர் முரளிராஜன், ஆல்பர்ட் ரகுராமன் ஆகியோர் பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஹாஸ்பிட்டாஸ் சீட்டை அடிக்கி நடுவில் சவப்பெட்டி போல் பள்ளம் தோண்டி 31 கேன்களில் மொத்தம் ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து வேன் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அந்த வாகனத்தையும் 1000 லிட்டர் எரிச்சாராயத்தையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.