கடலூரில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அழகுபெருமாள் குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ரேவதி, அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி தமிழரசி (53) குப்பைக்குள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். இது தொடர்பாக தமிழரசி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வி. பெத்தாங்குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அந்த பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி செல்வராணி (45) குப்பையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.