கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுநோய் நடவடிக்கைகளுக்காக (Liquid Oxygeon) ஆக்ஸிஜனுக்கு 50 லட்சம் ரூபாய், இதர உபகரணங்களுக்கு 5 லட்ச ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.
மேலும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்திடுமாறு தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வனிடம் வழங்கினார்.