கடலூர் மஞ்சக்குப்பத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் அமர்நாத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கடலூரில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கடலூர்: இடதுசாரி கட்சிகள் சார்பில் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீடு திட்டங்களுக்கு பயன்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ரயில்வே, ஏர் இந்தியா போன்றவற்றை தனியாருக்குத் தாரைவார்ப்பது நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உரிமைச் சட்டத்தின் கீழ் வேலை நாள்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும், அவர்களுக்கு சம்பள பாக்கி உடனடியாக வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை முறையாக தள்ளுபடி செய்ய வேண்டும், முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை மூன்று ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மா.கம்யூ கட்சியின் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு!