கடலூரில் தேசிய அளவிலான ஏழாம் ஆண்டு வில்வித்தை போட்டிகள் கடலூர் மாவட்டம். தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆறு வயது முதல் 20 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.