தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 பஞ்சாயத்து யூனியன் அலுவலத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் காலை முதல் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கார், பஸ்,வேன், மோட்டார் சைக்கிளில் மேளதாளங்களுடன் வந்தனர். யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்த நபருடன் மூன்று நபர்கள் மட்டுமே செல்ல அனுமதித்தனர்.