தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகரித்து வருகின்றது. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (மே.13) வரை 35 ஆயிரத்து 168 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதில் 31,812 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நோய்த் தொற்றின் காரணமாக 377 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட அரசு மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு 168 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் உள்ளன. இதன் காரணமாக புதியதாக வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களுக்கும் தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 31,892 நபர்களுக்கு கரோனா!