கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர், சித்தேரி பகுதியில் மது குற்றத்தை தடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மணிமேகலை என்பவரின் வீட்டின் பின்புறம் சோதனையிட்ட காவல்துறையினர், 20 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, மணிமேகலையை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மணிமேகலை மீது சிறுபாக்கம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.