தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெய்வேலி பெண் பாலியல் வன்புணர்வு வழக்கு: 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்! - நெய்வேலி பாலியல் வழக்கு

கடலூர்: நெய்வேலி அருகே பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

arrested at cuddalore
arrested at cuddalore

By

Published : Dec 23, 2019, 5:27 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் புதுதெற்குவெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயாவதி (31). கணவரை இழந்து வாழ்ந்துவரும் இப்பெண், வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் கடந்த 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே உள்ள கொள்ளிருப்பு காலனியைச் சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகியோர் இவர்களை வழி மறித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடலூர் மாவட்டத்தில் மூன்றுபேர் மீது குண்டர் சட்டம்- காவல் துறை நடவடிக்கை

பின்னர் மாயாவதியுடன் வந்த நபரை ஐந்து பேரும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டு, மறைவான பகுதிக்கு மாயாவதியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளனர்.

அனைத்தும் முடிந்த பின்னர் மாயாவதியை யார் அழைத்துச் செல்வது என்பதில் 'வன்புணர்வு கூட்டாளிகள்' ஐந்து பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நடந்த கைகலப்பில் ஐந்து பேரில் ஒருவரான பிரகாஷ் உயிரிழந்தார்.

இதற்கிடையே மாயாவதி, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரகாஷ் இறந்துவிட்டதால் எஞ்சிய நால்வரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையிலிருக்கும் நான்கு பேரையும் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details