கடலூர் : தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். புவனகிரி தொகுதியில் உள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தத் தேர்தல் தமிழர்களுடைய அடையாளத்தை காப்பாற்றவும், அவர்களுடைய கலாசாரத்தை காப்பாற்றி பாதுகாக்க நடைபெறும் தேர்தல். பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைப்பவையாகும்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராவர் - கே.எஸ். அழகிரி பெரியாரின் கருத்துக்களை களைவதற்காகவே இங்கே வந்து போராடுவதாக அவர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்று, இந்த மண்ணில் அனைவரும் சமமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத் தந்தவர்களில் பெரியார முதன்மையானவர்.
தமிழ்நாட்டின் விவசாயம், வேலைவாய்ப்பு, சிறுகுறு தொழில்களை, கல்வி வளர்ச்சியை முதன்மைப்படுத்துவது போன்ற கொள்கைகளைக் கொண்டது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெரிய வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். எங்கள் கூட்டணி, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்பார்” என்றார்.
இதையும் படிங்க:உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ