கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் கோரணபட்டு ஊராட்சி மொத்தம் ஒன்பது வார்டுகளை உள்ளடக்கியது. இதில், முதலாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகன், இந்திராணி, சீனிவாசன் ஆகிய மூன்று வேட்பாளர் போட்டியிட்டனர்.
இதனிடையே, வேட்பாளர் முருகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், சதீஷ்குமார் தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.