கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கோ. ஐயப்பனை ஆதரித்து, திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெரு அருகே எம்பி கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. மேடையில் அனைத்துக் கட்சியினரையும் சபித்துவருகிறார். அவர்களது ஆசை அனைத்தும் நிறைவேறாது என்றும் பேசிவருகிறார். தற்போது தெருவில் இறங்கி சாபம் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.
கடலூரில் எம்பி கனிமொழி பரப்புரை பழனிசாமி பதவி வெறிக்காகத் தமிழ்நாட்டையே கொண்டுபோய் டெல்லியில் அடைமானம் வைத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும், முதலமைச்சரும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தமிழ்நாட்டை மோடியிடம் அடைமானம் வைத்துள்ளனர்.
தான் ஒரு உழவன் எனச் சொல்லிவிட்டு வேளாண் சட்டத்தை ஆதரித்தவர் பழனிசாமி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை ரத்துசெய்வோம் எனத் தற்போது போலியாகப் பரப்புரை செய்கிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை - கமல்