கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை (செப்.17) காணொலி வாயிலாக சென்னையிலிருந்து திறந்துவைத்தார்.
முன்னதாக, சிலை திறப்பு விழாவையொட்டி நெய்வேலி நகரம் முழுவதும் திமுக கொடி மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான கணேசன் தலைமையில், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.