தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அதிமுக, திமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, பரப்புரையை தொடங்கியுள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடலுாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - kadloor dmk candidate sri ramesh
கடலுார்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி தொழிலாளர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீ ரமேஷை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடலுார் மேற்கு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடலுார் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீ ரமேஷை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.