கடலூர்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) நடைபெற்று வருகிறது. அதேபோன்று, சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வந்து சிதம்பரம் மானாசந்து தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம், "மக்கள் எழுச்சியோடு வாக்களித்து வருகிறார்கள். இதனைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிறது.
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்களிப்பு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். மக்களுடைய இந்த எழுச்சியை தாங்க முடியாத ஆளும் அதிமுக, பாஜக கூட்டணியினர் சரளமாக பண விநியோகம் செய்துள்ளனர். அந்த பணபலத்தை முறியடித்து திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு பின் முடிவுகளை அறிய ஒருமாதம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்டமாக நடத்தியிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. ஒரு மாத காலம் இந்த வாக்கு இயந்திரங்களைப் பாதுகாப்பது என்பது அதில் என்ன நடக்குமோ ? ஏது நடக்குமோ ? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரும் தேர்தல்களிலாவது இந்த நிலையை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அதிமுகவுக்கு தோல்வி பயம்: வாக்களித்த பின் மு.க. ஸ்டாலின்