தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் தீ விபத்தில் நீதிபதியின் கணவர் உயிரிழப்பு - cuddalore district news

கடலூர்: காரில் ஏற்பட்ட தீ விபத்தில் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியின் கணவர் உயிரிழந்தார்.

கார் தீ விபத்து
கார் தீ விபத்து

By

Published : Jan 11, 2021, 10:10 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புறவழிச்சாலைக்கு வேப்பூரிலிருந்து கார் வந்தது. மேட்டு காலனி ரயில்வே மேம்பாலம் அருகே எதிர்பாராத விதமாக காரின் எஞ்ஜின் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் காரை ஓட்டி வந்த நபர் வெளியேற முடியாமல் உடல் கருகி உயிரிழந்தார்.

இதுகுறித்து சக வாகன ஓட்டிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

கார் தீ விபத்து

முதல்கட்ட விசாரணையில் தீ விபத்தில் உடல் கருகி இறந்தவர் சென்னை புரசைவாக்கம் கவியரசு என்பது உறுதி செய்யப்பட்டது. இவரது மனைவி விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை என்பது தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: இணை அமைச்சரின் வாகனம் விபத்து... மனைவி உள்பட இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details