கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் வசிப்பவர் அன்பழகன். இவர், ஓய்வுபெற்ற அஞ்சல்துறை இளநிலை உதவியாளர். இவர் கடந்த 6ஆம் தேதி தனது மனைவியுடன் ஒரிசாவிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார்.
வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 35பவுன் நகைகள் கொள்ளை! - ஜன்னல் கதவின் கம்பிகளை உடைத்து 35பவுன் நகை கொள்ளை
கடலூர் : விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னல் கதவின் கம்பிகளை உடைத்து 35பவுன் நகைகளும், ரூ.6ஆயிரமும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
![வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 35பவுன் நகைகள் கொள்ளை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4454477-thumbnail-3x2-kollai.jpg)
இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய அன்பழகன், வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்ததுள்ளது.பின்பு, பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 35பவுன் நகையும், ரூ.6ஆயிரமும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிப்பப் பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.