கடலூர்:மனித நேய மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நலப்பணிகளுக்கான பயிற்சிக்கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலம் உள்ளாட்சி அமைப்புகளின் பொற்காலமாக இருந்தது. அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் மேலும் அதிகமான அதிகாரங்களையும், நிதியையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்
தூத்துக்குடியில் 15-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் வருகிற 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் வருவதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. அனில் அகர்வால் வருவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
நெய்வேலி இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக விவசாய நிலங்களை கல்வாயாக மாற்றும் பணியை செய்து வருகிறது. இந்த கால்வாய் வெட்டிய விளைநிலங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு கொடுத்து விட்டோம் என்று என்எல்சியும், திமுகவும் கூறுகிறது. ஆனால் நிலத்தை கையகப்படுத்தி விட்டால் அதை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். கையகப்படுத்தாவிட்டால், அதன்பிறகு அந்த நிலத்தின் உரிமையை, அனுபவத்தை அரசோ, அரசு நிறுவனமோ எடுக்க முடியாது அதன்படி கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு இழப்பீடு கொடுத்தாலும், நில எடுப்பு சட்டப்படி தற்போது என்எல்சி நிர்வாகம் சட்ட விரோத நடவடிக்கை எடுத்து வருகிறது.