கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 1428ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி! - Jamapandhi
கடலூர்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில், 1428ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி விழா நேற்று நடைபெற்றது.
jamapandhi event
இந்நிகழ்ச்சியில் கம்மாபுரம், குறுவட்டம், குமாரமங்கலம், கோ. ஆதனூர், கோபாலபுரம், சுகீரனூர், சேப்ளாநத்தம், பெரியகுறிச்சி, கீழ்பாதி, உய்யக்கொண்டார், கோட்டகம், கம்மாபுரம், மும்முடிசோழன், வேப்பங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.