கடலூர்மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (ஜெயப்பிரியா) தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்குத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 50 கிளைகள் உள்ளன. அது மட்டுமன்றி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்றவையும் உள்ளது.
சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் நெய்வேலியில் உள்ள தலைமை அலுவலகம், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளி, திரையரங்கு, தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.