தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் வைப்பது தவறில்லை' - கே.எஸ்.அழகிரி! - கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை

'வங்கக்கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுதினம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்பது பொறாமையில் சிலர் சொல்லும் கருத்துகள், இதை பொருட்படுத்த வேண்டாம்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை - கே.எஸ்.அழகிரி
கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை - கே.எஸ்.அழகிரி

By

Published : Jul 26, 2022, 5:28 PM IST

கடலூர்:இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமலாக்கத்துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மோடி அரசைக் கண்டித்து இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த பொழுது அவர் பேசியதாவது, 'சோனியா மீது மோடி அரசின் அமலாக்கத்துறை விசாரணை அமைத்துள்ளது. இது ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறானது. வேண்டுமென்றே நாங்கள் இப்படித்தான் செய்வோம்; எங்கள் ஆட்சி முறை இதுதான் என்ற வன்முறையாளர்கள் கையில் இந்த ஆட்சி சென்றுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வங்கக்கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பட்டேலுக்கு சிலை வைத்தபோது தவறு என்று யாரும் கூறவில்லை. பிரதமர் மோடிக்கு ரூபாய் 500 கோடி செலவில் விமானம் வாங்குகிறார்கள்.

ஒருசிலர் வேண்டுமென்றே பொறாமையில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்பதற்காக சொல்லும் கருத்துகளைப்பொருட்படுத்த வேண்டாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை வரவேற்கிறது' என்றார்.

மேலும் 'புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது; எனவே தமிழ்நாடு இதை ஏற்றுக் கொள்ளாது. புதிய கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரித்துப் பேசுவது அவருடைய வேலை அல்ல.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊசி வெடி போன்றவர், எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு சென்றுவிடுவார். எந்த குற்றச்சாட்டையும் அவரால் நிரூபிக்க முடியவில்லை' என்றுதெரிவித்தார்.

'கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் வைப்பது தவறில்லை' - கே.எஸ்.அழகிரி!

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச்செயலாளர் சித்தார்த்தன், மாநில துணைத்தலைவர் மணிரத்தினம் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details