கடலூர்: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. இதில் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்குத் தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
காவலர்களுக்கு நான்கு நாள்கள் விடுமுறை
வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் இரண்டாயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள பதவியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்தலுக்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவலர்களுக்கு, அக்டோபர் 9ஆம் தேதிக்குப் பிறகு நான்கு நாள்கள் தொடர் விடுமுறையளித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்ற காவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:தடுப்புக்காவலில் சித்து; உத்தரப்பிரதேச எல்லையில் பரபரப்பு