தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் இஸ்லாமியர்கள் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் - கடலூரில் இஸ்லாமியர்கள் போராட்டம்

கடலூர்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Islamic groups protest against  citizenship amendment act in cuddalore
Islamic groups protest against citizenship amendment act in cuddalore

By

Published : Mar 18, 2020, 6:53 PM IST

கடலூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய அமைப்பினர் தேசிய கொடி ஏந்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமையை மறுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் எனவும் உறுதியளிக்குமாறு வலியுறுத்தினர்.

புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சிறை நிரப்பும் போராட்டம்

இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தமிழ்நாடு மிரளும் வகையிலான போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: அரியலூரில் இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details