தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு கட்டுவதில் ரூ.1 கோடி முறைகேடு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குடிசை மாற்று குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி ரூபாய் முறைகேடு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
குடிசை மாற்று குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி ரூபாய் முறைகேடு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

By

Published : Jul 28, 2022, 8:58 PM IST

கடலூர்:பரங்கிபேட்டை பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 188 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

எட்வின்சாம்

இந்த நிலையில், S.எட்வின்சாம், செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கடலூர் (தற்போது சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக உள்ளார்), P.ஜெயக்குமார், உதவி பொறியாளர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கடலூர் கோட்டம் (தற்போது காஞ்சிபுரத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளார் ) ஆகிய 2 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயக்குமார்

மேலும் S.எட்வின் சாம் என்பவர் வருகின்ற 31.07.2022 அன்று ஒய்வு பெற உள்ள நிலையில் தற்போது அவர் மீது தற்காலிக பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்வதேச 'ராம்சார்' பட்டியலில் இணைந்த பிச்சாவரம்!

ABOUT THE AUTHOR

...view details