பாவேந்தர் பாரதிதாசன் எழுதி தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்திய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற தமிழ் நாடகம் 1934ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னையில் அரங்கேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்த நாடகம் சென்னையிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் நான்கு முறை அரங்கேற்றப்பட்டது.
அரக்கர்கள் உருவாவதில்லை; ஆளும் வர்க்கத்தினால் அரக்கர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், நாடக இயக்குநர் ராமசாமி முயற்சியில் ஆறாவது முறையாக கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நகர அரங்கில் நேற்று இரணியன் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடலூரில் அரங்கேறிய இரணியன் நாடகம் மேலும், 'அரக்கர்கள் உருவாவதில்லை, மாறாக தன் இனம், பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு எதிராக செயல்படும் நபர் ஆளும் வர்க்கத்தினால் அரக்கர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள்' என்பதுதான் இந்நாடகத்தின் மையக்கருத்து.
இதையும் படிங்க:இயல் இசை நடனத்துடன் பாரதி யார்? நாடகம் - ஆவலுடன் ரசித்த மக்கள்