தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் காவல் நிலையத்தில் 'நாப்கின் சிஸ்டம்' அறிமுகம்! - கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கடலூர்: அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் 'எனி டைம் நாப்கின் சிஸ்டம்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Women's Police Station
Women's Police Station

By

Published : Feb 16, 2021, 8:56 PM IST

பெண் காவலர்கள் நலன்கருதி தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டத்தின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள், அலுவலர்கள் பயன்படுத்தும் வகையில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.5-ஐ போட்டு தானியங்கி மிசினிலிருந்து நாப்கின் பெற்றுக்கொள்ளலாம். இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனத்தில் பெண்கள் கழிவறை காவலர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திலும் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர்களுடைய சிரமத்தை கணக்கில்கொண்டு இதுபோன்று அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காட்டன் நாப்கின்களைத் தயாரிக்கும் இளம் சுயத் தொழிலாளி!

ABOUT THE AUTHOR

...view details