தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்: வைரல் காணொலி! - Cuddalore District News

கடலூரில் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு காவல் அலுவலர் மிரட்டல்விடுவிக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.

சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்
சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்

By

Published : Jun 27, 2020, 10:18 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் (தீநுண்மி) தமிழ்நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அதேபோல் கடலூரிலும் இந்தக் கரோனா தொற்றின் என்ணிக்கையானது பெட்ரோல் விலை போல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைத் தடுக்கும்விதமாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உறுதிசெய்யும் பொருட்டு பல்வேறு இடங்களில் கரோனா கண்டறிதல் மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகிறது.

சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்: காணொலி வைரல்
இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாரம் ஸ்ரீநெடுஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் வ. செந்தமிழ்செல்வனை, சோழதரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வபாண்டியன் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டல்விடுத்துள்ளார்.

மேலும் தன்னுடைய குடும்பத்திற்கு உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், பரிசோதித்த 47 நபர்களின் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மிரட்டல்விடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடலூரில் இரண்டு தீட்சிதர் உட்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details