தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் தொடங்கும் உணவகங்கள் - கடலூரில் தூய்மைப் பணிகள் தீவிரம் - restructure work in hotels

கடலூர்: அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை முதல் உணவகங்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு கடலூரில் உணவகங்களை மறுசீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் தொடங்கும் உணவகங்கள்: தூய்மை பணிகள் தீவிரம்
நாளை முதல் தொடங்கும் உணவகங்கள்: தூய்மை பணிகள் தீவிரம்

By

Published : Jun 7, 2020, 8:15 PM IST

கரோனாவால் இழந்த பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையில், ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்தது. மேலும், தளர்வுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அதன்படி, நாளை முதல் உணவகங்கள் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகைளையும் வழங்கியுள்ளது.

உணவகங்களில் கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு ஆகியவை இருக்க வேண்டும், ஒரு உணவு மேசைக்கும், மற்றொரு உணவு மேசைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும், 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை நடைமுறைப்படுத்துவதில் கடலூரிலுள்ள உணவகங்கள் தீவிரம் காட்டிவருகின்றன. குறிப்பாக, உணவகங்களிலுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருப்பதால், உணவக உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர்.


இதையும் படிங்க: நாராயணசாமி குறித்து அவதூறுப் பரப்பியவர் மீது சைபர் கிரைமில் புகார்

ABOUT THE AUTHOR

...view details