தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருத்தாசலம் மறுவாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி - சுயேச்சை வேட்பாளர் வெற்றி

கடலூர்: விருத்தாசலத்தில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர் 28 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

recounting
recounting

By

Published : Jan 3, 2020, 9:27 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது இதில், விருத்தாசலம் 1ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் அர்ச்சுணனை விட சுயேட்சை வேட்பாளர் ஆனந்தகண்ணன் 120 வாக்குகள் கூடுதலாகப் பெற்ற நிலையில், அர்ச்சுணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகண்ணன் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர், தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதனால் 1ஆவது வார்டுக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

மறுவாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

பின்னர் மறு வாக்கு எண்ணிக்கையில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஆனந்த கண்ணன் 981 வாக்குகள் பெற்று 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

ABOUT THE AUTHOR

...view details