தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டலில் புகுந்து இளைஞரைத் தாக்கிய 3 பேர் கைது! - Cuddalore district Police

ஓட்டலில் புகுந்து இளைஞரைத் தாக்கிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஓட்டலில் புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம்
ஓட்டலில் புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம்

By

Published : Aug 5, 2021, 11:05 PM IST

கடலூர்: விருத்தாச்சலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணனுக்கும் கடந்த ஓராண்டு காலமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு காவல் துறை மூலம் சமாதானம் செய்யப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 03) விருதாச்சலம் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு விக்னேஷ் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு துக்க நிகழ்விற்குச் சென்று அவ்வழியேவந்த சரவணன், அவரது கூட்டாளிகள் அங்கு தேநீர் அருந்த வந்துள்ளனர்.

இதில் சரவணன் உள்பட எட்டு பேர் மதுபோதையில் இருந்த நிலையில், விக்னேஷை பார்த்தவுடன் முன்விரோதம் காரணமாக தகராறு செய்துள்ளனர்.

இதில் விக்னேஷ் ஓட்டலுக்குள் ஓடியதால் அவரைத் துரத்தி சரமாரியாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் சரவணன், அகத்தியன், ரஞ்சித்குமார், அருண், செந்தில், ஹரி, மணி, மதியழகன், ஆகிய எட்டு பேர் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் விக்னேஷ் காயமடைந்து விருத்தாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விருத்தாச்சலம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரஞ்சித் குமார், ஹரி, மதியழகன் ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் தலைமறைவாகவுள்ள ஐந்து பேரை விருத்தாச்சலம் காவலர்கள் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை'

ABOUT THE AUTHOR

...view details