புதுவை மாநிலம், நரம்பை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், மூர்த்திக்குப்பம் மீனவப் பகுதியைச் சேர்ந்த கணேஷின் நண்பர்கள் ஆகியோர், புதுச்சேரியிலிருந்து கடலுக்குத் தனது நண்பர்களைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கடலூர் பெண்ணையாறு பாலத்தின் மீது வேகமாக வந்தபோது, கடலூர் துறைமுகப் பகுதியிலிருந்து மீன் ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்ற மீன் வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்த், கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தனர்.