நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் அரசு அலுவலர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, இன்று (நவ.24) சிதம்பரம் திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மேலகுண்டலபாடி உள்ளிட்டப் பகுதிகளில், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் உதவி சார் ஆட்சியர் மதுபாலன் பாதுகாப்பு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.