கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு மிகவும் அச்சுறுத்தல் அளிக்க கூடிய ஒன்றாகும். திமுகவில் உதயநிதி ஸ்டாலினின் எட்டு வயது மகனுக்கும் பதவி கொடுப்பார்கள். சுயமரியாதை பற்றி திமுகவின் மூத்த தலைவர்களும் தன்மானம் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு குடைபிடித்து கும்பிட்டுக் கொண்டு நிற்பது வருத்தமளிக்கிறது.
முகிலனுக்கு ஆதரவளித்தால் தேச துரோகம் - எச்.ராஜா - Mugilan
கடலூர்: முகிலனுக்கு ஆதரவளித்து பேசினால் தேச துரோகி என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
வைகோ ஒரு தேச துரோகி என வழங்கப்பட்ட தீர்ப்பு எதிர்வரும் காலத்தில் அதுபோல் யாரும் பேசக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணி ஆகும். இந்த நிலையில், வைகோ மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருப்பது மானக்கேடான விஷயம். இது அரசியல் சட்டத்திற்கு இழுக்காகும். எனவே அவர் சட்டத்தை மதிக்க கூடியவராக இருக்க முடியாது என்பதால் தேர்தல் அலுவலர் வைகோவின் மனுவை நிராகரித்தால் நன்றாக இருக்கும்.
முகிலனை தமிழ்நாடு அரசு கொன்று விட்டதாக ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் தவறான வதந்தியை பரப்பி வந்தன. ஆனால் முகிலன் பாலியல் குற்றச்சாட்டுக்கு பயந்து ஓடி ஆந்திராவில் நக்சலைட் முகாமில் தலைமறைவாக இருந்தார் என்று செய்திகள் வருகின்றன. முகிலனுக்கு ஆதரவாகப் பேசுவது தேச துரோகம். நக்சலைட் குறித்து கௌரவிப்பது போன்று யாரும் பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வைகோ பாதையில்தான் போக வேண்டி இருக்கும் என அவர் தெரிவத்தார்.