தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன் - சசிகலா பேட்டி - கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பெண்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றும்; அது நல்லது அல்ல என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

நான் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் - சசிகலா பேட்டி
நான் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் - சசிகலா பேட்டி

By

Published : Jun 8, 2022, 8:23 PM IST

கடலூர் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பெண்கள் குடும்பத்திற்கு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 'இந்த கிராமத்தில் நீரோடையில் உயிர் இழந்த சிறுமிகள் கழிப்பறை,குளியலறை வசதி இல்லாததால் மாற்று பகுதிக்குச்சென்று அங்கு குளித்திருக்கிறார்கள். எனவே, இந்த கிராமம் முழுவதும் கழிப்பறை வசதி உடனடியாக ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செவிலியரை தேவைக்கு ஏற்ப வேலை வாங்கிவிட்டு தற்போது பணி நிரந்தரம் வழங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. நிரந்தரப்பணி வழங்க வேண்டியது அரசின் கடமை’ என்றார்.

பின்னர் சசிகலா பாரதிய ஜனதாவில் இணையப்போவதாக தகவல் வருகின்றது; இது உண்மையா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த சசிகலா, 'பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு வர வேண்டும் என அவரது ஆசையைத் தெரிவிக்கிறார். வேறு ஒன்றும் இல்லை’ எனத்தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சியாக பாஜக தான் செயல்படுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ’நான் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ எனக் கூறினார்.

சசிகலா பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ’சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி உரிமைகள் தீட்சிதர்களிடமே இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details