கடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் வசிப்பவர் அருணாசலம் (31). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், லட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்து எட்டு மாதத்திலேயே லட்சுமிக்குக் குழந்தை பிறந்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அருணாச்சலம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் லட்சுமி அடிக்கடி சில ஆண்களுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசி வந்ததால் இருவருக்கும், சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மனைவி தன் பேச்சைக் கேட்காததால், அருணாச்சலம் ஆத்திரமடைந்து லட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.