தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி கழுத்தை அறுத்துக் கொலை - கடலூரில் கணவர் வெறிச்செயல் - மனைவி நடத்தையில் சந்தேகம்

புவனகிரியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தட்டிக்கேட்ட மனைவியின் கழுத்தை கணவன் அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கரிகாலன்
கரிகாலன்

By

Published : Jun 13, 2021, 2:05 AM IST

கடலூர்:கீழ்புவனகிரியை சேர்ந்த தம்பதி கரிகாலன்-பச்சையம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பச்சையம்மாளுக்கு நீண்ட நாட்களாக தனது கணவன் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்தது. இதுகுறித்து நேற்று (ஜூன்12) பச்சையம்மாள், கரிகாலனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறு முற்றவே, கரிகாலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பச்சையம்மாளின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான கரிகாலனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பழிக்குப் பழியாக இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை!

ABOUT THE AUTHOR

...view details