தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் தற்கொலை செய்த கணவன்! - கணவன் மனைவி தற்கொலை

கடலூர்: மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவதிகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

house
house

By

Published : Jul 5, 2020, 2:39 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார் (31), சரண்யா (24). இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், சரண்யாவின் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் கடும் மன உளைச்சலுடன் இருந்த சிவகுமார் இன்று (ஜூலை 5) தற்கொலை செய்து கொண்டார். விடிந்து வெகு நேரமாகியும் சிவக்குமார் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமார் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details