தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புவாசியை கொலைசெய்த வீட்டின் உரிமையாளர் - crime news

ஒரு மாத வீட்டு வாடகை பணம் தராததால் வீட்டின் உரிமையாளர் குடியிருப்புவாசியை அடித்துக் கொலைசெய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாடகை  கடலூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  கடலூர் கொலை  குடியிருப்புவாசியை கொலை செய்த வீட்டின் உரிமையாளர்  கடலூர் குடியிருப்புவாசியை கொலை செய்த வீட்டின் உரிமையாளர்  cuddalore news  cuddalore latest news  house owner killed a tenant for not paying the home rent  crime news  cuddalore murder news   Suggested Mapping : state
குடியிருப்புவாசியை கொலை செய்த வீட்டின் உரிமையாளர்-வாடகையால் நேர்ந்த அவலம்

By

Published : Jun 12, 2021, 1:21 PM IST

கடலூர்: புதுப்பாளையம் அய்யனார் கோயில் பகுதியில் ரேவதி என்பவர் கணவனை இழந்து தனிமையில் வசித்துவருகிறார். இவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில், ராஜா என்கிற நாராயணமூர்த்தி கடந்த ஒன்றரை வருடங்களாக வாடகைக்கு வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத வாடகையை ராஜா கொடுக்காததால், ரேவதியின் உறவினரான ராஜேஷ் என்கிற சண்முகசுந்தரம் நேற்று (ஜூன் 11) காலை ராஜாவிடம் வீட்டு வாடகையைக் கேட்டுள்ளார். அதற்கு தான் வாடகையை நேரடியாக ரேவதியிடம் கொடுப்பதாக ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் எனறு ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகராறின்போது ராஜேஷ், ராஜாவை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ராஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 12) அதிகாலை உயிரிழந்தார். ஒரு மாதம் வீட்டு வாடகை தராததால் வீட்டில் குடியிருந்தவரை அடித்துக் கொலைசெய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுகவினரின் சுவரொட்டி சண்டை: 3 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details