கடலூர்:கடலூர் அடுத்த திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அதே ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சிவகுமாருக்கு நேற்று(மே24) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். சிவகுமாரின் மகள் அவந்திகா தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தேர்வு நடைபெற்றது.
தந்தை இறந்த துக்கத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்! - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
கடலூரில் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையிலும், அவரது மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.
தந்தை இறந்த துக்கத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்
மாரடைப்பால் உயிரிழந்த தந்தை சிவகுமாரின் உடல் வீட்டில் இருந்த நிலையில், அவரின் உடலை வணங்கி அவந்திகா பொதுத்தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்த அவந்திகா தந்தையின் உடலை கட்டிப்பிடித்து அழுதது உறவினர்களை கண்கலங்க வைத்தது.
இதையும் படிங்க: மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ