கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் புலியூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அவரது வீட்டின் பத்திரத்தை வைத்து கடன் வாங்கியுள்ளார். அந்தப் பத்திரத்தை மீட்பதற்கு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
கடன் பத்திரத்தை திருப்பித் தர லஞ்சம் கேட்ட கூட்டுறவு சங்க செயலாளர் கைது! - Cuddalore latest news
கடலூர்: கடன் பத்திரத்தை திருப்பித் தர லஞ்சம் கேட்ட பண்ருட்டி வட்ட கூட்டுறவு சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
Bribe news Cuddalore
இதுகுறித்து ராமச்சந்திரன் கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்று லஞ்ச பணத்தை ராமசந்திரன், பாஸ்கரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்