கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது போக்குவரத்து சமிக்ஞையில் (சிக்னல்) 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தலைக்கவசம் அணிந்தால் சாலை விபத்து ஏற்படும்போது உயிர்ச்சேதம் வராமல் தவிர்க்கலாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், உதவி ஆய்வாளர்கள் ஆதிலட்சுமி, புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைக்கவசம் அணிவோம்; உயிரைக் காப்போம்! - ஆய்வாளர் விழிப்புணர்வு - Helmet
கடலூர்: காவல் ஆய்வாளர் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தலைக்கவசம்
போக்குவரத்து சமிக்ஞையில் (சிக்னல்) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.