கடலூர்: வங்கக்கடலில் உருவாகிய புரெவி புயல் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து ராமேஸ்வரத்திலுள்ள பாம்பனைக் கடந்து பின் கேரள கடல் பகுதிக்குச் செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், புயலானது மன்னார் வளைகுடா அருகே ராமநாதபுரத்தில் வலுகுறைந்து தங்கியுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்கள் பலரும் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புரெவி புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகள் அனைத்தும் குளம்போல காட்சி தருகின்றன.