கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டன.பெண்ணாடம் -அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆணைவாரி ஓடை, உப்பு ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.
கனமழை காரணமாக 20- கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதி!! - கடலூர் மக்கள் கனமழையால் அவதி
கடலூர் : கனமழை பெய்து வருவதால் வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/19-September-2019/4485939_34_4485939_1568871529586.png
இதனால் கடலூர் அரியலூர் மாவட்டத்தை இணைக்கூடிய சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கடலுார் , அரியலுார் மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிகுள்ளாயினர். மேலும், ஆண்டு தோறும் பெய்து வரும் கன மழையால் இந்த தரைப்பாலம் அடித்து செல்லப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கடும் அவதிபட்டு வருகிறார்கள்.