தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரத்தில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா! - சிதம்பரத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல்

கடலூர்: காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

gutka seized one person arrest

By

Published : Sep 23, 2019, 11:24 AM IST

சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள குடோனில் பான்பராக், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிதம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், குடோன் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கஞ்சா, லாட்டரி, நகை பறிப்பு...! - செய்திக்குறிப்பு வெளியிட்ட காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details