தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்கள்! - ஜப்பான்

கடலூர்: தமிழ்நாட்டில் நலிந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளை, ஆசிரியர்கள் தங்களாகவே முன்வந்து சீர்செய்து வருகின்றனர்.

File pic

By

Published : May 16, 2019, 2:35 PM IST


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே குமுடிமூலை கிராமம் உல்ளது. இக்கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பல்வேறு சிறப்புத் திறன்களோடு கல்வியில் சிறந்து பயின்று வருகிறார்கள். ஆண்டுதோறும் சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள், தனித்திறன்போட்டிகள், சிறப்பு பாடத் திறனறிதல் போட்டி போன்றவற்றில் அசத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியை கண்கவரும் வண்ணத்தில் மாற்றியுள்ளனர் ஆசிரியர்கள்.

சேலம், திருப்பூர், தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே பட்டாம்பூச்சிகள் எனும் அமைப்பை தொடங்கி தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளை
கையிலெடுத்து பள்ளிக்கு வண்ணமடித்தல், பள்ளியில் சுவர்களில் பள்ளிமாணவர்களை எளிதிலும், உளவியல் ரீதியாகவும் ஈர்க்கும் வண்ணம், தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் ஓவியங்கள் வரைவது, சமூக சிந்தனை கருத்துக்களை ஓவியத்தில் வடிப்பது, பள்ளியில் மரக்கன்றுகள் நடுவது, பள்ளியின் கட்டமைப்பை சீர்செய்வது என பல்வேறு பணிகளை தங்களது
சொந்த பணத்தின் மூலமும் மற்றும் அரசுப்பள்ளிக்கு தாமாக உதவ முன்வரும் நன்கொடையாளர்களிடமும் பெற்று அரசுப்பள்ளிகளை அழகான பள்ளிகளாக மாற்றி வருகிறார்கள்.

அரசுப்பள்ளி அழகான பள்ளி

இந்நிலையில் கும்மூடிமூலை அரசு நடுநிலைப்பள்ளியில் சுவற்றில் தமிழர்களின் வீரவிளையாட்டைச்சொல்லும் ஜல்லிக்கட்டு காளை வீரர் காளையை அடக்குவது போன்ற படம், இயற்கையை காப்போம், ஆணும், பெண்ணும் சமம் என்பதை
உணர்த்தும் படம், கலைகளின் மதிப்பை உணர்த்தும் பரதநாட்டியம் என மாணவர்கள் பார்த்தவுடன் புரிந்துக்கொள்ளக் கூடிய நற்சிந்தனை, அறிவியல் கருத்துக்களை உருவாக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

இதற்கான நிதியுதவியை ஜப்பான் வாழ் தமிழர்களின் 'முழுமதி' அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, நாங்கள் இவ்வாறு செய்வதின் நோக்கமே அரசுப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தான்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை இதுபோல் பல்வேறு ஓவியங்களை தீட்டி அழகு மிளிரும் அரசுப்பள்ளியாக
மாற்றியிருக்கிறோம். நாங்கள் இப்போது செய்து வரும் அனைத்து பணிகளையும் அரசுடன், அரசு அதிகாரிகளுடன் இணைந்துதான் செய்து வருகிறோம். அரசுப்பள்ளி நமது பள்ளி. நமது முன்னேற்றம் அரசுப்பள்ளியில்தான் உள்ளது என்பதே எங்களது இலக்காக கொண்டு இப்பணிகளை நாங்கள் விடுமுறை நாட்களில் செய்கிறோம். நாங்கள் தொடர்ந்து அரசுப்பள்ளிகளை அழகான பள்ளிகளாக்கி, அரசுப்பள்ளியை நோக்கி மாணவர்களை வரவைப்பதை எங்களது நோக்கம் என்று கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details