கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஜவான்பாவன் சாலையில் காசி விசாலாட்சி உடனுறை விஷ்வநாதீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. நேற்று இரவு (ஜன.07) பூஜைகள் முடிந்து கோயிலை மூடிவிட்டுச் சென்ற நிலையில் கோயில் பூசாரி இன்று (ஜன.08) காலை கோயிலைத் திறந்தார்.
பின்னர், உள்ளே நுழைந்தபோது கோயில் கருவறையின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர், நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.