கடலூர்அடுத்த 2 கிலோ மீட்டரில் தொலைவில் புதுவை மாநில எல்லை உள்ளது. இங்கு மதுபான விலைகள் குறைவாக விற்கப்படுவதால் மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுப்பது வழக்கம். இந்நிலையில் கடலூர் அருகே புதுச்சேரி மாநிலம் செரியங் குப்பத்தில் சாராயக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்துவதற்காக கடலூரில் இருந்து நாள்தோறும் இலவச ஆட்டோ இயங்குகிறது.
கடலூர் பாரதி சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து ஆட்டோக்கள் புறப்படும். நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஆட்டோக்களில் சாராயக்கடை செல்பவர்களை அங்கிருந்து ஒவ்வொரு ஆட்டோவிலும் 5 முதல் 10 நபர்கள் வரை அழைத்துச் சென்று புதுச்சேரியில் உள்ள கடையில் கொண்டு சென்று விடுவார்கள்.
இப்படி அழைத்து செல்பவர்களுக்கு ஆட்டோவில் கட்டணம் கிடையாது. வேறு எங்காவது வழியில் இறங்கினால் கட்டணம் உண்டு. ஆனால் இதில் முழுக்க முழுக்க சாராயக்கடை செல்பவர்கள் மட்டுமே வாடிக்கையாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்கள். கடந்த மூன்று நான்கு மாதங்களாக இது போன்று ஆட்டோக்கள் புதுவை எல்லையில் அதிகமாக காணப்படுகின்றன. சாராயக்கடை பிக்கப் டிராப் இலவச சர்வீஸ் நடைபெறுகிறது. இதனை அறிந்தும் கடலூர் மாவட்ட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
பெரியார் சிலை கீழிருந்து சாராயக்கடை செல்ல ஆட்டோ இயங்குவது என்பது வேதனைக்குரியது. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பாடலில் இடம்பெற்று சர்ச்சையான ’ஒன்றியம்’ வார்த்தை குறித்து விளக்கமளித்த கமல்!