தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

OLX-இல் போலி செக் கொடுத்து கார் வாங்கிய நபர் கைது! - giving fake check to buy a car in OLX

கடலூர்: போலி காசோலை கொடுத்து OLX-இல் கார் வாங்கி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

arrested
arrested

By

Published : Jun 4, 2020, 8:48 PM IST

கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த யோகராஜ் (32) என்பவர் தனது மஹிந்திரா பொலேரோ காரை கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று OLX-இல் விற்க விளம்பரம் செய்துள்ளார். இதைப் பார்த்த திருவண்ணாமலை மாவட்டம், கனத்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (33) என்பவர் காரை வாங்கிக்கொண்டு, ரொக்கப் பணமாக வழங்காமல் காசோலையாகக் கொடுத்துள்ளார்.

அதை வங்கியில் சென்று மாற்றியபோது போலி என தெரியவந்ததையடுத்து யோகராஜ், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். அப்புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், செக் மோசடியில் ஈடுபட்ட பாஸ்கரை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், மோசடி செய்து வாங்கப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வறுமையால் 2 தொழிலாளர்கள் தூக்கிட்டுத் தற்கொலை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details