தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘25ஆம் தேதி ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபம் திறப்பு’ - முதலமைச்சர் - former minister Ramasamy padayachiyar

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைக்க இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Ramasamy

By

Published : Nov 14, 2019, 5:03 PM IST

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ரூ. 2.15 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், இன்று மணிமண்டபத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா மேடை அமைவிடம், முக்கிய விருந்தினர்கள் செல்லும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

Ramasamy

அதன்பின் இது தொடர்பாக பேசிய அவர், எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைக்க இருப்பதாக, தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details