தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருத்தாசலத்தில் மட்டுமே கவனம்; பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன்!

கடலூர்: முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால் இம்முறை பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது என்றும் விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

premalatha
premalatha

By

Published : Mar 18, 2021, 8:36 PM IST

அமமுக கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளரும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "2006ல் விஜயகாந்த் வெற்றி பெற்று, பல நல்ல திட்டங்களை விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு செய்துள்ளார். 2021ல் மீண்டும் அந்த வரலாற்றை நிரூபிப்போம். முரசு சின்னத்தில் போட்டியிடும் நான் அமோக வாக்குகளைப் பெற்று வெல்வேன்.

இதுவரை 16 ஆண்டு காலம் கட்சிக்காக நான் தேர்தல் பிரச்சாரம் செய்தேன். முதல்முறையாக நான் போட்டியிடுவதால் இம்முறை பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது. அதனால் சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்வார்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவார்” என்று கூறினார்.

விருத்தாசலத்தில் மட்டுமே கவனம்; பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன்!

முன்னதாக விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு சென்ற பிரேமலதா, தேர்தலில் வெற்றி பெற வேண்டி பிராது சீட்டு கட்டினார். அதனைத் தொடர்ந்து இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால், விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆலய வளாகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதையும் படிங்க: ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு வழங்குவதில் குளறுபடி- அப்பாவு புகார்

ABOUT THE AUTHOR

...view details